2025/2026 மதிப்பீட்டு ஆண்டு வருமான வரி – இன்று இறுதி நாள் - Global Tamil Voice உலக தமிழ் குரல்

2025/2026 மதிப்பீட்டு ஆண்டு வருமான வரி – இன்று இறுதி நாள்

 


2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான இறுதி வருமான வரிக் கொடுப்பனவை இன்று (30)க்குள் நிறைவு செய்யுமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரி செலுத்துவோருக்கு அறிவித்துள்ளது.

நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் கூட்டாண்மை வியாபாரங்கள் உள்ளிட்ட வருமான வரி செலுத்தும் அனைவரும், கொடுப்பனவு காலப்பகுதி குறியீடாக 25260 என்பதைப் பயன்படுத்த வேண்டும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, உரிய வரி வகைக்கான பின்வரும் Tax Type Code-களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது:

  • நிறுவன வருமான வரி – Tax Type Code 02

  • தனிநபர் வருமான வரி – Tax Type Code 05

  • கூட்டாண்மை வியாபார வருமான வரி – Tax Type Code 09

வரி செலுத்துவோர் இணையவழி முறையில் வரிகளைச் செலுத்த முடியும். அதேவேளை, இலங்கை வங்கி (Bank of Ceylon) கிளைகளுக்குச் சென்றும் வரிக் கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும்.

இறுதித் திகதிக்குப் பின்னர் வரிக் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டால், வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, உரிய காலக்கெடுவுக்குள் வரிகளைச் செலுத்துமாறு வரி செலுத்துவோரிடம் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் 1944 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்ள முடியும்.

About Lanka Theepam